Sunday, May 22, 2016

THANK YOU, MY BOYS





*




 1985-88 ஆண்டு மாணவர்கள் இன்று (22.06.2016) கல்லூரியில் ஒன்று கூடுகிறார்கள்ஆசிரியர்களுக்கும் அழைப்பு உண்டுஆனால் என்னை அழைத்த போது கல்லூரிக்குள் நான் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கூறினேன். (தடைக்கான காரணம் -- இங்கே. )



 


இருந்தும் நேரில் பார்க்க விரும்பினார்கள் இருவர் வீட்டு முகவரி கேட்டு இரு நாட்களுக்கு முன்பே வந்தனர்கையில் அழைப்பிதழோடு வந்தார்கள்நீங்கள் கல்லூரிக்கு வர முடியாவிட்டால்நாங்கள் உங்கள் வீட்டுக்கு அனைவரும் வந்து விடுகிறோம் என்றார்கள்அனைவருக்கும் எதற்கு அலைச்சல்வேண்டுமென்றால் நான் கல்லூரிக்கு வெளியில் வந்து விடுகிறேனே என்றேன். ‘அது மரியாதையில்லைநாங்களே வந்து விடுகிறோம்’ என்றார்கள்.








மாலை மூன்று மணிக்கு மேல் வருகிறோம் என்றார்கள்அதன்படி வந்தார்கள்சின்ன வீடு … அட்ஜஸ்ட் செய்து உட்கார வைத்தேன்சின்னப் பசங்களாகப் பார்த்ததுகால் நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதே…. எல்லோரும் எங்கெங்கு என்னவாக இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்நான் அதிகமாக மாறவில்லை என்றார்கள் – தொப்பையைத் தவிர. (ஆக அப்போதேஅவர்கள் மாணவர்களாக இருந்த போதே நான் ஒரு ‘வங்கிழடாக’ இருந்திருப்பேன் போலும்! )





 ஒரு ”பையன்” .. அப்போது நான் வைத்திருந்த ஜாவா பைக் பற்றிக் கேட்டான்(ர்). இன்னொரு “பையன்” என் ஜோல்னா பைகயிற்றில் தொங்கும் மூக்குக் கண்ணாடி,ஜிப்பா என்று தொடர்ந்தான்(ர்). இன்னொரு ”பையனுக்கு” இன்னொரு  ஆசைஎன்னை ஜீன்ஸில் அன்று பார்த்தது போல் இன்றும் பார்க்க வேண்டும் என்றான்(ர்). ’நான் கிராமத்திலிருந்து வந்தவன்உங்களை அப்போது ஜீன்ஸில் பார்த்தது போல் பார்க்க வேண்டும் என்றான்(ர்). உடை மாற்றிக் கொண்டேன்ஒரு மாணவன், “எல்லா தேர்வுகளிலும் நான் பிட் அடிப்பேன்உங்கள் supervisionல் மட்டும் நான் பிட் அடிக்கவில்லை” என்று  சோகமாகச் சொன்னான்(ர்).








 நான் இவர்களுக்கு முதலாண்டும்மூன்றாமாண்டும் வகுப்பு எடுத்திருக்கிறேன்என் வழக்கம் முதல் ஆண்டில் கொஞ்சம் ‘உதார்’ காண்பித்தும்மூன்றாமாண்டு  இறுதி செமஸ்டரில் அதிகத் தோழமையுடன் இருப்பது வழக்கம்ஆனால் முதலாண்டில் என் உதாரில் கொஞ்சம் பயந்து போய் ஒரு பட்டப் பெயர் வைத்தார்களாம்பெயரையும் சொன்னார்கள் – அதுவும் என் துணைவியாரிடம்வைத்த பெயர் – சிங்கம். (ஓரளவு இந்தப் பெயரை வைத்து இரண்டு மூன்று நாளைக்கு வீட்டில் ‘உதார்’ காண்பித்துக் கொள்ளலாம்!)

ஒரு cameraman வேற வந்திருந்தார்என்னோடும்துணைவியாருடனும் படங்கள் எடுத்தோம்.  சில மணித்துளிகள் என்றாலும் அன்பால் நிறைந்திருந்த நேரம் அது.


அழகான கைக்கெடிகாரம் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்கைக்கெடிகாரத்தில் 85 ZOO என்று போட்டிருந்ததுகைத்தொலை பேசி வந்த பிறகு கைக்கெடிகாரம் அணிவது ஏறத்தாழ இல்லாமல் போயிற்றுஇருந்தாலும் இன்று காலை போட்டோ எடுக்கக் கையில் கட்டினேன்அதன் பின் இப்போது வரை கழட்ட மனமில்லை
அதோடு 85 ZOO என்று போட்டு விட்டார்களேஅதன் மதிப்பே மாறி விட்டதுஇப்போதே அந்தக் கைகெடிகாரத்திற்கு 31 ஆண்டு வயதாகி விட்டதே
The watch has got a great antique value now itself!


அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்குப் பெருமை சேர்த்தனஎன்னைத் தேடி என் வீட்டிற்கே அனைவரும் வந்தது மிகுந்த நெகிழ்ச்சியைக் கொடுத்ததுபூரிப்படைய வைத்தது.


வாத்தியார்களுக்குத் தான் தெரியும் … பழைய மாணவர்கள் அவர்களைச் சந்திக்க வந்து, பழைய பக்கங்களைப் புரட்டும் போது ஏற்படும் பெருமிதம் எவ்வளவு என்பது!






*