Friday, August 22, 2014

CASE AGAINST AMERICAN COLLEGE PRINCIPAL




*

CASE AGAINST 

AMERICAN COLLEGE PRINCIPAL


The Madras High Court Bench here on Wednesday ordered notice to The American College Principal M. Davamani Christober in a quo warranto writ petition questioning the authority under which he was holding this post.

The petitioner, D.Samuel Lawrence, claimed that Mr. Christober was not qualified to be the Principal.

THE HINDU, AUG 24





*
அமெரிக்கன் கல்லூரி முதல்வருக்கு 

எதிராக வழக்கு

மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வரை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் உயர் கல்விச் செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

மதுரை திருப்பாலையைச் சேர்ந்த டி.சாமுவேல் லாரன்ஸ், உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் எம். தவமணி கிறிஸ்டோபருக்கு, பல்கலைக் கழக மானியக் குழு விதிப்படி கல்லூரி முதல்வராக பணியாற்ற தகுதியில்லை. அவர் கல்லூரி முதல்வராக நியமனம் செயல்படுவதற்குரிய கல்வித் தகுதி, அனுபவம் பெறவில்லை. தவமணி கிறிஸ்டோபரை முதல்வராக நியமனம் செய்ததை செல்லாது என அறிவிக்க வேண்டும். அவர் முதல்வராக செயல்பட தடை விதிக்க வேண்டும். கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குனர் நேரடியாக சம்பளம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதி கே.கே. சசிதரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவிற்குப் பதிலளிக்க உயர் கல்விச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.



தி இந்து, ஆக 24




*