Wednesday, November 23, 2011

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ....




*

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அதிகாரியை முற்றுகையிட்ட மாணவர்கள்போலீஸ் குவிப்பு

மதுரை:மதுரை அமெரிக்கன் கல்லூரி நேற்று திறக்கப்பட்டதும், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், கல்லூரி கல்வி இணை இயக்குனரை முற்றுகையிட்டு, "கெரோ' செய்தனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.கல்லூரியில் சி.எஸ்.ஐ., பிஷப் மற்றும் முன்னாள் முதல்வர் தரப்பினர் இடையே மோதல் இருந்து வருகிறது. கடந்த 11 மாதங்களாக, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. புதிய அரசு அமைந்ததும், பொது கமிட்டி அமைப்பது குறித்து, இருதரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதற்கிடையே, கோர்ட் உத்தரவுப்படி, சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது. ரெகுலர் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.

இரு வாரங்களுக்கு முன் கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன்னாத்தாள் தலைமையில், ரெகுலர் ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. நவ., 23ம் தேதி கல்லூரி திறப்பது குறித்து பேசினர். நேற்று கல்லூரி திறக்கப்பட்டது. இணை இயக்குனர் பொன்னாத்தாள் கல்லூரிக்கு சென்றார். ஒவ்வொரு துறையாக சென்று பேராசிரியர்களை பணியில் அமர்த்தினார். கணிதத் துறைக்குச் சென்றபோது பிரச்னை உருவானது.அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இணை இயக்குனரை முற்றுகையிட்டு, "கெரோ' செய்தனர். கோஷங்களை எழுப்பினர். "கடந்த 11 மாதங்களாக எங்களுக்காக பணியாற்றிய ஆசிரியர்களை வெளியேற்றக் கூடாது' என, கோஷங்களை எழுப்பினர். இணை இயக்குனர் கல்லூரியை விட்டு வெளியேறினார். போலீசார் குவிக்கப்பட்டனர்.கலெக்டர் சகாயம் தலைமையில் ஆர்.டி.ஓ., துரைராஜ், கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன்னாத்தாள் ஆகியோர், ஆலோசனை நடத்தினர். இதில், 2010ம் ஆண்டில் இருந்த நிலைப்படியே (ஸ்டேட்டஸ் கோ) செயல்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

*

No comments:

Post a Comment