Wednesday, May 1, 2024

A SUNKEN SHIP…?



Following is the list of colleges and their ranking in all India level. List of colleges in TN are ranked here. Our College does not find a place here.

In the top 50 colleges, 5 colleges from Madurai find a place: 

Fatima College  ---         rank    16
Lady Doak College -                  34
Thirumalai Naicker college -    40
Yadava College                          44
Saraswathi Naryanan College - 49

Last December, the Chennai alumni association organized a big gala day in our college campus. A big carnival. A whatsapp was started then. Some two weeks back seeing this list one of our old students felt very bad about it and expressed his anguish. 

Since many of our alumni are in dark about the struggle that was going on against the present principal I sent a note to the whatsapp group. 

I sent the following note .....

***

A SUNKEN SHIP…?

1970 – 2003.  A glorious period of my life. I worked in a “heaven”. Our American College staff, compared to so many other colleges, were a gifted lot. So many nice things we enjoyed unlike other college faculty. To quote one single example, in my early days we never have to sign any daily attendance register. When you have work, do it. That’s all. In all other colleges, most of the managements had this as a shackle to keep faculty under their duress.  Our college had to go for it only after the insistence of the government after giving direct salary payment.

Freedom was so much for both to the students and staff. We enjoyed it with our own set standards. Staff-student relationship was admirable. Especially the testimony of graduate students who go for other colleges for post graduation always tend to say what a great life they had in our college.

Then came a struggle in the college in the years after 2008. A long and bitter journey for people who loved this college. During this period thru this blog and by direct contact,  alumni who were in higher echelons were even approached. Unluckily people thought that it was just an internal politics. None realised the biggest danger the college would be facing if the unruly elements took the reins.

Had all the faculty come together or if the student community stood with the fighting faculty, things would have been different. Only the non-teaching staff who stood so strongly with the fighting people are to be always remembered with great gratitude.

Government rule says that the principalship is only for 5 to 10 years and principals should relieve the post for the next senior. Ha.. this rule is not for those who are so power mongering like the present principal. Who cares for government rules and regulations.  Powerful people have powerful tools!

Who cares for the all India ranking of colleges. Their only aim is to have the “college industry” to mint money. They days when our college worked so hard for such glories were all over.

So goes the story….

******


Like this blog, the whole lot of alumni in that group is in very deep silence !!!


 

Sunday, April 28, 2024

A SUNKEN SHIP…?

 



1970 – 2003.  A glorious period of my life. I worked in a “heaven”. Our American College staff, compared to so many other colleges, were a gifted lot. So many nice things we enjoyed unlike other college faculty. To quote one single example, in my early days we never have to sign any daily attendance register. When you have work, do it. That’s all. In all other colleges, most of the managements had this as a shackle to keep faculty under their duress.  Our college had to go for it only after the insistence of the government after giving direct salary payment.

Freedom was so much for both to the students and staff. We enjoyed it with our own set standards. Staff-student relationship was admirable. Especially the testimony of graduate students who go for other colleges for post graduation always tend to say what a great life they had in our college.

Then came a struggle in the college in the years after 2008. A long and bitter journey for people who loved this college. During this period thru this blog and by direct contact,  alumni who were in higher echelons were even approached. Unluckily people thought that it was just an internal politics. None realised the biggest danger the college would be facing if the unruly elements took the reins.

Had all the faculty come together or if the student community stood with the fighting faculty, things would have been different. Only the non-teaching staff who stood so strongly with the fighting people are to be always remembered with great gratitude.

Government rule says that the principalship is only for 5 to 10 years and principals should relieve the post for the next senior. Ha.. this rule is not for those who are so power mongering like the present principal. Who cares for government rules and regulations.  Powerful people have powerful tools!

Who cares for the all India ranking of colleges. Their only aim is to have the “college industry” to mint money. More students ... more money! The days when our college worked so hard for such glories were all over.

So goes the story….

******

A MUST READ FOR THE ALUMNI: https://americancoll.blogspot.com/search/label/MUST%20READ


Friday, April 26, 2024



Rev. Dr. Sidney D.  Fowler 
First Congregational  United Church of Christ 
309 E Street,  NW 
Washington, DC  20001

Reverend Dr. Richard B. Griffis, United Church of Christ (UCC) pastor and 
former  national staff member, died in
Washington, D.C., on Tuesday morning, December  6.  Through his long ministry, Richard served the church through a remarkable variety of settings – as a pastor of local churches, with both the  conference and national settings of the UCC, and through justice and  inter-religious activism. He was 77.  
Richard had standing in the Connecticut Conference  serving as senior 
minister of Immanuel Congregational UCC,
Hartford, for  thirteen years. He also served as an interim minister at Round Hill  Church in Greenwich, at 
Congregational Church of Union, and as Interim  Minister of Stewardship and Mission Interpretation for the Connecticut  Conference. For the Capitol Region Conference of Churches, Richard was  co-director of Breakthrough to the Aging. He also served Plymouth  Congregational Church in
Minneapolis, First Congregational UCC of Minnesota in  Minneapolis, and First Congregational UCC in Grand Marais MN. In 1965, while  serving First Congregational UCC of Minnesota, Richard marched with Martin  Luther King, Jr. at Selma, Alabama. Richard was the founder of the Connecticut Committee for Interreligious Understanding Along with his wife, Anne Hungerford Griffis, they  served with the American Friends Service Committee in Nigeria in assisting  with relief and reconstruction after the Biafra civil war.  From  1972-1977, Richard served on the 
staff of the former UCC Office for Church  Life and Leadership in New York City and as assistant to Robert Moss,  President of the UCC. 
Since 2002, Richard and Anne have been living in  
Washington DC near their sons, Geoffrey and Roger, and their families  including 5 grandchildren.  In DC, Richard was an active member of First Congregational UCC – serving on the Church Council, Social Action and  Awareness Commission, and as a frequent preacher and worship leader.  He  was a Board member of the United Nations Association of the National Capital  Area, member of the Interfaith Conference of Metropolitan Washington, member  of the Steering Committee of the Unity Walk, and trustee of the Endowment Fund  of the American College in 
Madurai, India.
 
A memorial service will  celebrate Richard’s life and faith on Sunday, 
January 15, at
4:00 pm at First  Congregational UCC in Washington, DC. The service will be only the third  worship service in the new downtown building that Richard was instrumental in  supporting its construction.   
In lieu of flowers, the  family kindly suggests donations to the United 
Nations Association, National  Capitol Area (UNA
2000 P Street NW Suite 630, Washington DC 20036) and First  Congregational UCC (309 E Street NW, 
Washington DC,  20001).

Thursday, April 21, 2022

பழைய மாணவர்களுக்கு ஒரு செய்தி. A BITTER INFO FOR THE ALUMNI










 

நேற்றைய செய்திக்கு ஒரு பின் குறிப்பு: முழு விவரத்தையும் தொலைபேசி வழியாகக்  கேட்ட பல மாணவ நண்பர்களுக்கு ஒரு விளக்கம்.

 

தவறான வழியில் முதல்வரான முனை.தவமணி, பத்தாண்டு மட்டுமே முதல்வர் பதவி என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு மரியாதை கொடுக்காது தொடர்ந்து முதல்வர் பதவியில் நீட்டித்துக் கொண்டிருப்பதால் வழக்கொன்று தொடுக்கப்பட்டது. நீதியரசர் ‘இது ஒரு அரசின் ஆணை. அதை அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும்; நீதிமன்றத்தால் இதைச் செய்ய முடியாதென’ இரு மாதங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. அரசு விரைவில் ஆவன செய்யும் என்று நம்புகிறோம்.

 

இப்போது தெரிகிறதா புது செயலர் வேக வேகமாக இந்தக் கூடுகைக்கும், பாராட்டுக்கும் ஏன் விரைகிறார் என்று!

 

Spread the word to your A.C. friends.

Tuesday, March 15, 2022

BUNKER IN OUR COLLEGE ... A NEW FRAUDULENT IDEA SOLD TO THE MEDIA

 

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். நம் முதல்வர் கிறிஸ்டோபர் தவமணி வளாகத்தில் பதுங்கு குழியைக் கண்டுபிடித்து வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார். பலதுறைகளில் சிறந்து விளங்கும் நம் முதல்வர் ஒரு தொல்பொருள் ஆய்வாளராகவும் விளங்குவதில் நமக்கு ஆச்சரியமில்லை. பத்தாண்டுகளாக நமது 40 ஏக்கர் வளாகத்தை அங்குலம் அங்குலமாகத் தோண்டி ஆய்வு செய்துவரும்போதுசில நாட்களுக்குமுன்செங்கமங்கலான ஒரு மாலை நேரத்தில் முதல்வர் அவர் தொண்டர்களுடன் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோதுமுதல்வருடைய கடப்பாறையில் ‘நங்ங்ங்....என்று விசித்திரமான சப்தம் எழுந்ததாகவும்அருகில் மண்வெட்டி தட்டுகளுடன் அகழ்வுப் பணியிலிருந்த துணைமுதல்வர்நிதிக்காப்பாளர் மற்றும் பல்வகையான டீன்கள்மகிழ்ச்சி வெள்ளத்தில் ‘ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்... அல்லேலூயாஎன்று கூச்சலிட்டவாறு முதல்வர் நெம்பிய ஒரு டன் எடையுள்ள பாறையை முட்டுக் கொடுத்து தூக்கியபோது ஒரு ரகசிய வழி தென்பட்டதாகவும் ‘பிபிசிசெய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவர் மட்டுமே செல்லக்கூடியதாக அந்த வழி இருந்ததால் நம் முதல்வர் மட்டுமே உயிரைப் பணயம் வைத்து உள்ளே சென்று பூதக் கண்ணாடியால் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளார். முதல்வரை உள்ளே அனுப்பிவிட்டுஅவருடைய தைரியத்தையும் துணிச்சலையும் வியந்தவாறு நம் டீன்கள் பதட்டத்தில் விரல்களில் ரத்தம் வரும் அளவுக்கு அவரவர் நகங்களைக் கடித்து துப்பிக் கொண்டிருந்தனராம். இன்னும் சிலர் முழங்கால்களில் நின்று ஜெபிக்கத் தொடங்கிவிட்டனராம். முதல்வர் குழிக்குள் சென்று பலமணிநேரங்கள் ஆகிவிட்ட செய்தி வளாகம் முழுவதும் பரவிதுந்துபிகளோடும் கிண்ணரங்களோடும் வந்த நமது கல்லூரி பாடற்குழு ஜெபத்தோட்ட கீதங்களை பாடத்தொடங்கிவிட்டனராம். பலமணி நேரங்களுக்குப் பின் பலநூற்றாண்டு நூலாம்படைகள் சூழ வெற்றிக் களிப்போடு வெளிவந்த முதல்வர் ‘முடியாது என்றார்கள். நான் முடித்துக் காட்டினேன் என்றாராம். உணர்ச்சிவசப்பட்ட அவருடைய விசுவாசிகள் சிந்திய ஆனந்த கண்ணீரில் வளாகத்தில் ஒரு ஓடையே உருவானதாக வளாகவாசிகள் கூறுகிறார்கள். செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், 'அமெரிக்கன் கல்லூரியை வரலாற்றில் எவ்வளவு பின்னோக்கிக் கொண்டு செல்லமுடியுமோ அவ்வளவு பின்னுக்குக் கொண்டு சென்றுவிட்டேன். தனியொருவனாக இதைச் சாதித்துக் காட்டிவிட்டேன்என்றார்.

இந்த புதிய அகழாய்வுச் செய்தியைக் கேள்விப்பட்ட கீழடி ஆய்வாளர்கள் வைகை நாகரீகம் கீழடியிலிருந்து ஆரம்பிப்பதாகக் கருதினோம். அமெரிக்கன் கல்லூரி முதல்வரின் கண்டுபிடிப்பால் ‘வைகை நாகரீகம் கல்லூரி பதுங்கு குழியிலிருந்து தொடங்குவதாக ஒப்புக்கொள்கிறோம். இனி நாங்கள் கீழடி அகழ்வாய்வைத் தொரடவேண்டிய அவசியமில்லைஎன்று கூறி தங்கள் எல்லாவற்றையும் வெளியே எடுத்து சுத்தப்படுத்தி இந்த மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தி விளம்பரமாக மாற்றி இருக்கிறார். தனியாக நின்று கவனமாக விளம்பரத்திற்காகவே எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த செய்தி நம்முடைய ஊடகங்களின் இன்றைய பரிதாப நிலையைத் தெரிவிப்பதாக இருக்கிறது. ஆங்கில இந்து உட்பட செய்தியின் உண்மைத் தன்மையை சரிபார்க்காமல் வெளியிட்டிருக்கின்றன. ஒரு புகழ்பெற்ற கல்லூரியின் முதல்வர் இப்படி வரலாற்றையே புரட்டுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். என்ன சொல்வது?

உண்மையில் இப்போது அமெரிக்கன் கல்லூரியின் தலையாய பிரச்சனை, முதல்வர் இன்னும் முதல்வராகவே இருக்கிறாரா? அவருடைய வழக்கு என்ன ஆனதுசெயலராக நீடிக்கிறாராஅடுத்தமாதம் சமபளம் வருமாஎன்பதுதான். இது முதல்வரும் அறிந்ததுதான். பொதுமக்கள் மத்தியிலும்

அரசு வட்டாரங்களிலும் சரிந்துவிட்ட தன் image ஐ தூக்கி நிறுத்த அவர் செய்யும் மலிவான உத்திகளே இத்தகைய விளம்பரங்கள்.

முதல்வர் அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வதெல்லாம். இது டிஜிட்டல் யுகம். பத்திரிக்கை செய்திகளை அப்படியே நம்பிக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு ஊடகவியலாளர். நம்முடைய சாமர்த்தியங்களெல்லாம் மிக எளிதாக அம்பலமாகிவிடக்கூடிய காலம். அதனால் இனிமேலாவது இத்தகைய குறுக்குவழி விளம்பரங்களைக் கைவிட்டுநேர்மையாக முதல்வர் தன் கண்முன்னால் இருக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டும்.

 

 




i have personally seen this so called "bunker". it was then a place filled with all broken furniture. i was told the previous principal cleared the place. now ...here comes the GREAT DISCOVERY of christoper. probably Ukraine war became a nice opportunity for him to talk about WWI and a "bunker"! what an inventor!

 

Monday, March 14, 2022

IS OUR COLLEGE NOW A FALLEN ANGEL? SORRY STATE OF AFFAIRS IN OUR COLLEGE.

 

ஊழல் புகாரிலும் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டிலும் 

சிக்கித் தவிக்கும் பிரபல கல்லூரி முதல்வர்.


சி.பி..பிடியில் 

அமெரிக்கன் கல்லூரி முதல்வர் கிறிஸ்டோபர் தவமணியும் 

பொருளாளர் ஷீலாவும்


வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதமான பாடங்களை நடத்த கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி. சிறப்பு நிதி வழங்கி வருகிறது. கல்லூரிகளில் படிக்க வசதியில்லாத, உடனடியாக வேலைகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு பயனளிக்கவே இந்தப் பாடங்கள். இதற்கு வழங்கப்படும் நிதியை பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கான

ஊதியம் மற்றும் கருவிகள் வாங்குவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அமெரிக்கன் கல்லூரியில் யூ.ஜி.சி. விதிமுறைகளின்படி பயிற்சிபெற்ற ஆசிரியர்களை நியமிக்காமல் ஏற்கனவே பணிசெய்யும் ஆசிரியர்களைப் பயன் படுத்தியுள்ளதோடு, அங்கு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களை வற்புறுத்தி மாணவர்களாக இணைத்துள்ளார். இது மிகப்பெரிய விதிமீறலாகும். ஏறத்தாழ 2கோடிக்கும் மேலான யூ.ஜி.சி. தொகையில் முதல் தவனையாக வந்த 92லட்சத்தில் 73 லட்சத்தை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் இதற்கு பொருளாளர் பேராசிரியர் ஷீலாவும் உடந்தையாக இருந்துள்ளார் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சகட்டமாக முதல்வர் தவமணியும் பொருளாளர் ஷீலாவும் அவர்கள் சொந்த வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றியுள்ளதை அந்தக் கல்லூரி பேராசிரியர் பிரேம்சிங் என்பவர் ஆதாரங்களோடு வழக்குத் தொடுத்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக பல்கலைக் கழகத்திற்கு புகார் மனு கொடுத்ததைத் தொடர்ந்து பேராசிரியர் பிரேம்சிங் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளார். சி.பி.. விசாரிக்கத் தொடங்கியுள்ள இந்த விவகாரம் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்கன் கல்லூரியின் முதல்வராகவும் செயலராகவும் இருந்து வரும் தவமணி கிறிஸ்டோபர், தொடர்ந்து பல்வேறுவிதமான சர்ச்சைகளில் சிக்கி வருபவர். 50க்கும் மேற்பட்ட சீனியர் பேராசிரியர்களை பின்னுக்குத் தள்ளி, பேராயராக இருந்த அவருடைய மாமனாரின் தயவில் முதல்வரானார். கல்லூரிக்குள் பெரும் கலவரத்தையும் வன்முறையையும் நடத்தித்தான் முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர் அழகப்பா பல்கலைக் கழகத்தில் பெற்ற பி.எச்.டி. பட்டம் முறைகேடாகப் பெற்றது என்ற வழக்கு இன்னும் உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பதவியேற்ற நாள் முதல் இதுவரை 80 பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்திற்கு தலைக்கு 40 லட்சம் வரை மொத்தமாக 20 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளார். மாணவர் அட்மிசனுக்கு 25 ஆயிரங்கள் முதல் 1லட்சம் வரை சிக்கிய வரை லாபம் என்று கல்லா கட்டி வருகிறார். கட்டிடங்கள் கட்டுவதில் 40 சதவீதம் கமிசன், விடுதிக்கட்டணத்தில் கமிசன் என்று பத்தாண்டுகளில் பல நூறு கோடிகளைச் சொத்துக்களாகச் சேர்த்துள்ளார். ஆசிரியர்களை மிரட்ட அடியாட்களை வேலைக்கு வைப்பது, கேள்வி கேட்கும் ஆசிரியர்களை சஸ்பண்ட் செய்வது, விடுதி கட்டணக் கொள்ளையை எதிர்க்கும் மாணவர்களை மிரட்டுவது என்று ஒரு கிறிஸ்தவ மாஃபியாவாகத் செயல்பட்டு வருகிறார். காவல் துறை, ஜே.டி.சி அலுவலகம், உயர் கல்வித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என்று எல்லா இடங்களிலும் பினாமி ஜான்சன் தவமணி கிறிஸ்டோபரின் செல்வாக்கு யாரும் கற்பனை செய்ய முடியாதது. அவர் தாராளமாக வாரி வழங்கும் வைட்டமின் ''வின் சக்தி அப்படி என்று சொல்கிறார்கள். இவருக்கு பினாமியாக செயல்படுபவர் பெயிண்ட் கடை ஜான்சன். முதல்வருக்கு ஏற்படும் பாலியல் ரீதியான சிக்கல்களையும், மற்ற அப்பாயின் மண்ட் மற்றும் அட்மிசன் ரீதியான கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடைத்தரகராய் இருந்து வருபவர். கல்லூரிக்குள் முதல்வர் தவமணி செய்யும் அத்தனை அத்துமீறல்களுக்கும் பக்கபலமாய் இருந்து வருபவர்கள் முதல்வரின் நண்பர்களான உடற்கல்வி ஆசிரியர் ஒருவரும் வணிகவியல் துறைத்தலைவரும். முதல்வரை எதிர்ப்பவர்களுடன் பஞ்சாயத்து செய்வது, மாணவர்களை, ஆசிரியர்களை மிரட்டுவது போன்ற செயல்களைச் செய்து வருபவர்கள். இதற்கு பிரதிபலனாக முதல்வருடன் வெளிநாடுகளுக்கு உல்லாச பயணங்கள் சென்று வருபவர்கள். முதல்வரின் இந்த இரண்டு நண்பர்களைப் பற்றி பேராசிரியைகளிடம் விசாரித்தால் பல விசயங்கள் வெளிவரும்.

மதுரையைச் சுற்றி பலநூறு ஏக்கர் நிலங்களை வளைத்துப்போட்டுள்ள தவமணி கிறிஸ்டோபர் கொடைக்கானலில் மட்டும் 4 பங்களாக்களை வாங்கிப் பராமரித்து வருகிறார். ஒரு சொகுசு பங்களாவில் ஹோம் தியேட்டர் மட்டும் 50 லட்சங்களாம். இந்த பங்களாக்களில் அரசு அதிகாரிகள் மற்றும் வேண்டப்பட்டவர்களுக்கு சகல வசதிகளும் செய்து தரப்படுமாம். ஆகவே எந்த அரசுத்துறையும் அவர்மேல் கைவைக்க முடியாதாம். முதல்வரின் சொத்து மதிப்பு 200 கோடிகள் என்று கணக்கெடுத்தபின்னும் வருமான வரித்துறையோ , லஞ்ச ஒழிப்பு துறையோ வேடிக்கை பார்ப்பதன் காரணம் ஊகிக்க முடியாததல்ல. முதல்வர் தவமணிக்கு ஜெர்மன் கார்கள் என்றால் அலாதி பிரியம். அவர் வைத்திருக்கும் கார்களின் பட்டியல் தமிழக முதல்வர் வைத்திருக்கும் கார்களின் பட்டியலைவிட நீளமானது. பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஆடி, ஸ்கோடா. இவ்வளவு புகார்களுக்குப் பின்னும் முதல்வர் தவமணி சென்ற மாதம் வாங்கியிருக்கும் ஆடி காரின்'விலையே 70 லட்சம் மட்டுமே. கொடுக்கல் வாங்கலில் கல்லூரி முதல்வர் பிஸியாக இருப்பதால் மாணவர்கள்மேல் கவனம் செலுத்துவதில்லையாம். அமெரிக்கன் கல்லூரி விடுதியில் மாணவர்கள் சிலர் கஞ்சா வியாபாரம் செய்துவந்த விசயம், அப்போதைய கமிஷனர் வரை போய் தவமணியை கடுமையாக எச்சரித்து அனுப்பினாராம் அப்போதைய கமிஷனர். பாரம்பரியமிக்க கல்லூரியின் பெயர் கெடக்கூ டா தென்று அந்த விசயம் காவல்துறையின் நடவடிக்கைக்குள்ளாகாமல் மூடப்பட்டது.

இவை ஒரு புறமிருக்க, இளம் பெண் பேராசிரியர்களை ஒருமையில் அழைப்பது, வா புள்ள, போ புள்ள என்று செல்லமாக பேசுவது, இந்த சேலை உனக்கு நல்லா இல்ல என்று விளையாடுவது கண்டு பெண் பேராசிரியர்கள் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இது குறித்து விசாரித்தால் அதிர்ச்சியூட்டும்

உண்மைகள் வெளிவரும். அவருக்கு எதிராக மூச்சு விட்டாலே அவருக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்கிறார் ஒரு இளம் பேராசிரியை. முதல்வருடைய பிறந்த நாள் ஒன்றில் மாணவிகளும் இளம் பேராசிரியர் ஒருவரும் அவருக்கு கேக் ஊட்டி, அவர் முகத்தில் கேக்கைத் தடவி விளையாடிய வீடியோ கல்லூரி வட்டாரத்தில் பிரபலம். இந்த முறைகேடுகள் குறித்து மூத்த பேராசிரியர்கள் பலமுறை கல்லூரி கவுன்சிலுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையே அரசு விதியின் படி தவமணி கிறிஸ்டோபரின் முதல்வர் பதவிக்காலம் முடிவுக்கு

டது. கடந்த அக்டோபர் மாதத்தோடு முதல்வருக்கான 10 ஆண்டு காலம் நிறைவடைவதால் அவர்முதல்வராக நீடிக்க முடியாது. தவமணி ஓய்வு பெற இன்னும் 3ஆண்டுகாலம் உள்ளதால் அது வரை முதல்வராகத் தொடர்வேன் என்று வழக்கு மன்றத்தை நாடியுள்ளார். பணி நீடிப்பு விசயத்தில் தமிழக உயர்கல்வித்துறையின் தயவும் தமிழக அரசின் தயவும் தேவை என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு கொரானா நிதியாக 25லட்சத்தை தமிழக முதல்வரிடம் அளித்துள்ளார். தமிழகத்தில் எந்தக் கல்லூரியும் இத்தகைய நிதி வழங்கியதாகத் தெரியவில்லை என்பதோடு, ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை இப்படித் தன் சுயநலத்துக்காக நன்கொடையாக வழங்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று மூத்த ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

ஏற்கனவே அதிமுக அரசை சமாளித்ததுபோல் ஊழலற்ற ஆட்சி வழங்குவதில் முனைப்பாக இருக்கும் திமுக அரசையும் சமாளித்து பதிவியில் தொடர்ந்தே தீருவேன் என்று சவால் விட்டுள்ளாராம் தவமணி கிறிஸ்டோபர். தவமணி கிறிஸ்டோபர் பதவி ஏற்ற நாள் முதல் கல்லூரியின் தரம் தாறுமாறாக ஆகிவிட்டது. ஆண்டுதோறும் இந்தியாவின் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. நூறு சிறந்த கல்லூரிகளில் மதுரையின் தியாகராஜா கல்லூரியும் லேடிடோக் கல்லூரியும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கன் கல்லூரி 200க்கு அருகாமையில் உள்ளது. இதுதான் முதல்வரின் சாதனை.

சமீபத்தில் தீடீரென மதுரை மாணவர்கள் ஆன் லைன் தேர்வுதான் எழுதுவோம் என போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டம் எங்கிருந்து தொடங்கியது என காவல்துறை புலன்விசாரணை செய்யத்தொடங்கியது. விசாரணையில் இந்தப் போராட்டம் மதுரையிலிருந்து அதிலும் அமெரிக்கன் கல்லூரியில் அதன் முதல்வரான தவமணியால் திட்ட மிட்டு உருவாக்கப்பட்டது என்று கண்டுபிடித்தனர். கட்டண வசூலுக்காக கணக்கில்லாமல் மாணவர்களைச் சேர்த்ததன் விளைவாக, கொரானா கால கட்டுப்பாடுகள் எதையும் பின்பற்றமுடியாது என்பதாலும், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த ஆன் லைன் தேர்வுதான் வசதி என்பதாலும் முதல்வர் தவமணியே இந்தப் போராட்டத்தை தூண்டிவிட்டார் என்பதை வாட்ஸ் அப் செய்திகள், முதல்வர் மாணவர்களுடன் பேசிய வீடியோ போன்ற ஆதாரங்களைக் கண்டு அனைத்து கல்லூரி முதல்வர்கள் முன்னிலையில் தவமணியை எச்சரித்து அனுப்பியுள்ளார் மதுரை ஆட்சியர் முதல்வர் பதவிக்கு வருவதற்காக 10 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களை வைத்தே பெரும் கலவரத்தை வெற்றிகரமாக நடத்தியவர் என்பதையும் சக ஆசிரியர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.

மைனாரட்டி என்ற போர்வையில் ஒரு பாரம்பரியமான கல்வி நிறுவனத்தை நாசமாக்கி வருவதை

ர் கல்வித்துறை கண்டு கொள்வதில்லையாம். ஏனெனில் உயர்கல்வித்துறையே தவமணி கிறிஸ்டோபரின் கவனிப்பில் இருக்கிறதாம். 10 ஆண்டுகள்தான் முதல்வர் பணிக்காலம் என்ற அரசு ஆணையையை எனக்காக தமிழக அரசு மாற்றும். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். 2025 வரை என்னை யாரும் அசைக்கமுடியாது என்று சவால் விட்டுள்ளாராம் தவமணி கிறிஸ்டோபர். தவணியின் சவாலுக்கு தமிழக அரசின் எதிர்வினை என்னவாக இருக்கப்போகிறது? உயர் கல்வித்துறை அமைச்சரும் தமிழக முதல்வரும் நல்ல முடிவை எடுத்து கல்லூரியைக் காப்பாற்றினால்தான் உண்டு என்கிறார்கள் மூத்த பேராசிரியர்களும் கல்லூரியின் நலன் விரும்பிகளும்.

 

 *****

Prof.Dr. PREM SINGH filed a case against his suspension and won the case. he is now back in the college. CBI has filed a case against Christoper for the alleged fraud on UGC grant.