கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். நம் முதல்வர் கிறிஸ்டோபர் தவமணி வளாகத்தில் பதுங்கு குழியைக் கண்டுபிடித்து வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார். பலதுறைகளில் சிறந்து விளங்கும் நம் முதல்வர் ஒரு தொல்பொருள் ஆய்வாளராகவும் விளங்குவதில் நமக்கு ஆச்சரியமில்லை. பத்தாண்டுகளாக நமது 40 ஏக்கர் வளாகத்தை அங்குலம் அங்குலமாகத் தோண்டி ஆய்வு செய்துவரும்போது, சில நாட்களுக்குமுன், செங்கமங்கலான ஒரு மாலை நேரத்தில் முதல்வர் அவர் தொண்டர்களுடன் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முதல்வருடைய கடப்பாறையில் ‘நங்ங்ங்....' என்று விசித்திரமான சப்தம் எழுந்ததாகவும், அருகில் மண்வெட்டி தட்டுகளுடன் அகழ்வுப் பணியிலிருந்த துணைமுதல்வர், நிதிக்காப்பாளர் மற்றும் பல்வகையான டீன்கள், மகிழ்ச்சி வெள்ளத்தில் ‘ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்... அல்லேலூயா' என்று கூச்சலிட்டவாறு முதல்வர் நெம்பிய ஒரு டன் எடையுள்ள பாறையை முட்டுக் கொடுத்து தூக்கியபோது ஒரு ரகசிய வழி தென்பட்டதாகவும் ‘பிபிசி' செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவர் மட்டுமே செல்லக்கூடியதாக அந்த வழி இருந்ததால் நம் முதல்வர் மட்டுமே உயிரைப் பணயம் வைத்து உள்ளே சென்று பூதக் கண்ணாடியால் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளார். முதல்வரை உள்ளே அனுப்பிவிட்டு, அவருடைய தைரியத்தையும் துணிச்சலையும் வியந்தவாறு நம் டீன்கள் பதட்டத்தில் விரல்களில் ரத்தம் வரும் அளவுக்கு அவரவர் நகங்களைக் கடித்து துப்பிக் கொண்டிருந்தனராம். இன்னும் சிலர் முழங்கால்களில் நின்று ஜெபிக்கத் தொடங்கிவிட்டனராம். முதல்வர் குழிக்குள் சென்று பலமணிநேரங்கள் ஆகிவிட்ட செய்தி வளாகம் முழுவதும் பரவி, துந்துபிகளோடும் கிண்ணரங்களோடும் வந்த நமது கல்லூரி பாடற்குழு ஜெபத்தோட்ட கீதங்களை பாடத்தொடங்கிவிட்டனராம். பலமணி நேரங்களுக்குப் பின் பலநூற்றாண்டு நூலாம்படைகள் சூழ வெற்றிக் களிப்போடு வெளிவந்த முதல்வர் ‘முடியாது என்றார்கள். நான் முடித்துக் காட்டினேன் ' என்றாராம். உணர்ச்சிவசப்பட்ட அவருடைய விசுவாசிகள் சிந்திய ஆனந்த கண்ணீரில் வளாகத்தில் ஒரு ஓடையே உருவானதாக வளாகவாசிகள் கூறுகிறார்கள். செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், 'அமெரிக்கன் கல்லூரியை வரலாற்றில் எவ்வளவு பின்னோக்கிக் கொண்டு செல்லமுடியுமோ அவ்வளவு பின்னுக்குக் கொண்டு சென்றுவிட்டேன். தனியொருவனாக இதைச் சாதித்துக் காட்டிவிட்டேன்' என்றார்.
இந்த புதிய அகழாய்வுச் செய்தியைக் கேள்விப்பட்ட கீழடி ஆய்வாளர்கள் ' வைகை நாகரீகம் கீழடியிலிருந்து ஆரம்பிப்பதாகக் கருதினோம். அமெரிக்கன் கல்லூரி முதல்வரின் கண்டுபிடிப்பால் ‘வைகை நாகரீகம் கல்லூரி பதுங்கு குழியிலிருந்து தொடங்குவதாக ஒப்புக்கொள்கிறோம். இனி நாங்கள் கீழடி அகழ்வாய்வைத் தொரடவேண்டிய அவசியமில்லை' என்று கூறி தங்கள் எல்லாவற்றையும் வெளியே எடுத்து சுத்தப்படுத்தி இந்த மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தி விளம்பரமாக மாற்றி இருக்கிறார். தனியாக நின்று கவனமாக விளம்பரத்திற்காகவே எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த செய்தி நம்முடைய ஊடகங்களின் இன்றைய பரிதாப நிலையைத் தெரிவிப்பதாக இருக்கிறது. ஆங்கில இந்து உட்பட செய்தியின் உண்மைத் தன்மையை சரிபார்க்காமல் வெளியிட்டிருக்கின்றன. ஒரு புகழ்பெற்ற கல்லூரியின் முதல்வர் இப்படி வரலாற்றையே புரட்டுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். என்ன சொல்வது?
உண்மையில் இப்போது அமெரிக்கன் கல்லூரியின் தலையாய பிரச்சனை, முதல்வர் இன்னும் முதல்வராகவே இருக்கிறாரா? அவருடைய வழக்கு என்ன ஆனது? செயலராக நீடிக்கிறாரா? அடுத்தமாதம் சமபளம் வருமா? என்பதுதான். இது முதல்வரும் அறிந்ததுதான். பொதுமக்கள் மத்தியிலும்
அரசு வட்டாரங்களிலும் சரிந்துவிட்ட தன் image ஐ தூக்கி நிறுத்த அவர் செய்யும் மலிவான உத்திகளே இத்தகைய விளம்பரங்கள்.
முதல்வர் அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வதெல்லாம். இது டிஜிட்டல் யுகம். பத்திரிக்கை செய்திகளை அப்படியே நம்பிக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு ஊடகவியலாளர். நம்முடைய சாமர்த்தியங்களெல்லாம் மிக எளிதாக அம்பலமாகிவிடக்கூடிய காலம். அதனால் இனிமேலாவது இத்தகைய குறுக்குவழி விளம்பரங்களைக் கைவிட்டு, நேர்மையாக முதல்வர் தன் கண்முன்னால் இருக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment