Tuesday, December 15, 2015

A FINAL JOURNEY .. TOGETHER

Dear Sam: 

Please include this news in American College web page you are maintaining. Thanks. Austin as a great friend of many in the College, a great sports man and an NCC officer though the news reporter describes him as a Professor. His wife Freda was the Physical Director in LDC. VS
  








ராமநாதபுரம்: 
ராமநாதபுரம் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் இறந்தார். ராமநாதபுரம் சிங்காரத்தோப்பைச் சேர்ந்தவர் ஆஸ்டின் வேதமுத்து, 88. முதுகலை பட்டதாரி. மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினார். 

பெங்களூரூவைச் சேர்ந்தவர் பிரிடா , 84. முதுகலை பட்டதாரி. மதுரை லேடி டோக் கல்லுாரியில் பேராசிரியையாக பணியாற்றினார். இருவரும் காதலித்து 1956 மே மாதம் ராமநாதபுரத்தில் பெற்றோர் சம்மதப்படி திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் பணியில் இருந்து விலகிய இருவரும் 1968ல் கனடா சென்றனர். அங்கு ஒரு பள்ளியில் இருவரும் உடற்கல்வி ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றனர்.

2006 லிருந்து ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசையில் அவரது தம்பி ஸ்டீபன் ஜெயசீலனுடன் ஆஸ்டின் தம்பதியினர் வசித்து வந்தனர். வயோதிகம் காரணமாக இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் டிச., 12 இரவு 8.30 மணிக்கு பிரிடா ஆஸ்டின் இறந்தார். நேற்று காலை 8 மணிக்கு உடல் அடக்கம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

மனைவி இறந்த சோகத்தில் இருந்த ஆஸ்டின் வேதமுத்து டிச., 13 இரவு 8.30 மணிக்கு இறந்தார். இருவரின் உடல்களும் ராமநாதபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டன.ஸ்டீபன் ஜெயசீலன் கூறுகையில்,“ காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் இருவரும் 59 ஆண்டுகள் இணைபிரியாமல் ஒற்றுமையாக இருந்தனர். இருவருக்கும் இடையே சிறு பிரச்னைகள் கூட வந்ததில்லை. குழந்தை இல்லாத குறை ஒன்றுதான். எங்கு சென்றாலும் சேர்ந்து சென்ற அவர்கள் இறப்பிலும் பிரியாமல் சென்று விட்டனர்,”

2 comments:

  1. More about Mr. V. S. Austin. He was the Physical Director at Thaigarajar Engineering College before joining The American College. He was an NCC officer too. Gave the sports events an Olympic touch with the "flame" lit directly from sunlight (with the Physics Department supplying the technology (sun light focusing system). Went to USA on a Oberlin fellowship and decided to stay on and work there. Returned to India after retirement (and old age)

    ReplyDelete
  2. I remember him as a tall majestic looking young physical director vibrant with energy and enthusiasm. He was in the American College only for a few years but even within that short period, through his friendly nature he became popular among the faculty and students alike.

    ReplyDelete