*
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rousing-reception-to-kalyani-mathivanan/article6188022.ece
Madurai Kamaraj University staff and local functionaries of AIADMK gave a rousing reception to Kalyani Mathivanan, who returned to her office on Monday.
Ms. Mathivanan returned to Madurai after the Supreme Court ordered an interim stay on the Madras High Court Bench’s judgment which had set aside her appointment as Vice-Chancellor on the ground that she had served only as an Associate Professor and not as a Professor, as required under UGC regulations, to become eligible for the post of VC.
On Monday, more than 100 supporters gathered at the airport here, where she, along with her daughter, landed at around 9.30 a.m.
After accepting bouquets and garlands from her supporters, she left for the university in her official vehicle, in a convoy of around 30 cars. She was accorded a traditional welcome with ‘poorna kumbam’ at the MKU.
After accepting the wishes of AIADMK functionaries, she cut a cake embossed with the ruling party flag. She then walked up to her office amid a festive atmosphere. All along the way, around 175 students of MKU Nursery and Primary School, and staff of the university showered flowers on her. A horde of banners welcoming her were erected on the campus.
As Ms. Mathivanan reached the first floor of the administrative building where her office is located, she thanked her supporters. She was accompanied by party functionaries and university staff to her office, where she paid respects to the portrait of her father former VC M.D.K. Kuthalingam. Slogans were raised in support of her.
“Do what you want madam. Five hundred families are here to support you,” shouted her supporters in chorus.
“I have lot of work to do. That is why I am back,” she told the staff who called on her to offer congratulations.
However, she refused to address the media stating that the matter is sub judice. When asked what is on the immediate agenda on academic development, she said she would meet the press soon.
“I do not want to say anything now. Give me some time,” she added.
------------------------------
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=59287
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் மதுரை வந்த காமராஜர்
பல்கலை. துணைவேந்தர் கல்யாணிக்கு பிரமாண்ட வரவேற்பு கட்அவுட், மேளதாளம் என அமர்க்களம்
நாகமலை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் கல்யாணி மதிவாணன். இவர் உரிய தகுதியின்றி
துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இதை விசாரித்த ஐகோர்ட், கல்யாணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து
அவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் ஐகோர்ட் கிளை
உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவால்
பல்கலைக்கழகத்துக்கு வர முடியாமல் இருந்த கல்யாணி, இன்று மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு
வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவருக்கு, விமான நிலையத்தில்
பேராசிரியர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் சென்று வரவேற்பு
அளித்தனர்.
விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட துணைவேந்தருக்கு முன்னும், பின்னும் ஏராளமான கார்கள் பின்தொடர்ந்து அணிவகுத்து சென்றன. துணைவேந்தர் கார் பல்கலைக்கழக பிரதான நுழைவுவாயிலுக்கு வந்த போது, தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, மேளதாளம், தாரை தப்பட்டை முழங்க பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்கலையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர், சிறுவர், சிறுமிகளும் வழிநெடுக நின்று துணைவேந்தர் மீது மலர்ளைத் தூவி வரவேற்றனர். துணைவேந்தரை வரவேற்க அதிமுக கரைவேட்டியுடன் ஏராளமானோர் வந்திருந்தனர்.துணைவேந்தர் வருகையை ஒட்டி பல்கலை. வளாகம் முழுவதும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான கட்அவுட்கள், பெரிய அளவிலான பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ‘தமிழக அரசின் துணையுடன் வெற்றி பெற்று திரும்பிய துணைவேந்தரே வருக என்பது உள்ளிட்ட வரவேற்பு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=59287#sthash.IMyHd9K5.dpuf
விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட துணைவேந்தருக்கு முன்னும், பின்னும் ஏராளமான கார்கள் பின்தொடர்ந்து அணிவகுத்து சென்றன. துணைவேந்தர் கார் பல்கலைக்கழக பிரதான நுழைவுவாயிலுக்கு வந்த போது, தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, மேளதாளம், தாரை தப்பட்டை முழங்க பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்கலையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர், சிறுவர், சிறுமிகளும் வழிநெடுக நின்று துணைவேந்தர் மீது மலர்ளைத் தூவி வரவேற்றனர். துணைவேந்தரை வரவேற்க அதிமுக கரைவேட்டியுடன் ஏராளமானோர் வந்திருந்தனர்.துணைவேந்தர் வருகையை ஒட்டி பல்கலை. வளாகம் முழுவதும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான கட்அவுட்கள், பெரிய அளவிலான பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ‘தமிழக அரசின் துணையுடன் வெற்றி பெற்று திரும்பிய துணைவேந்தரே வருக என்பது உள்ளிட்ட வரவேற்பு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=59287#sthash.IMyHd9K5.dpuf
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24994&cat=1
துணைவேந்தருக்கு பட்டாசு வெடித்து,
மேளதாளம் முழங்க வரவேற்பு!
ஜூலை 08,2014,11:27 IST
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர்
கல்யாணிக்கு நேற்று தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பத்து ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற யு.ஜி.சி. விதி
பின்பற்றப்படவில்லை எனக் கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்
காமராஜ் பல்கலை துணைவேந்தர் பணி நியமனம் செல்லாது என உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து துணைவேந்தர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலான மேல்முறையீட்டில்
ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோர்ட் நிகழ்வுகள் நடந்தபோது
அவர் சென்னையில் இருந்தார்.
கோர்ட் உத்தரவிற்குபின் நேற்று மதுரை வந்த அவருக்கு விமான நிலையத்தில்
பல்கலை ஊழியர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்கலை வளாக நுழைவு வாயிலில் பட்டாசு
வெடித்து, மேளதாளம் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
துணைவேந்தருக்கு சிலர் கறுப்புக் கொடி காட்டுவதாக தகவல் வெளியானதால்
பல்கலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
துதிபாடிகளை தூரத்தில் வைப்பாரா துணைவேந்தர்: பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு-11-04-2012
எழுத்தின் அளவு :
மதுரை: "துதி பாடியே காலத்தை
ஓட்டும் கும்பலை இனம் கண்டு தூரத்தில் வைத்து, பல்கலை வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான
பணிகளை புதிய துணைவேந்தர் கல்யாணி மேற்கொள்ள வேண்டும்' என, மதுரை காமராஜ் பல்கலை நடுநிலை
பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த பல்கலையில் மு.வரதராஜன், சிட்டிபாபு, கிருஷ்ணசாமி, ராமச்சந்திரன்
போன்ற அனுபவமிக்க கல்வியாளர்கள் துணைவேந்தர்களாக இருந்து உள்ளனர். பல்கலை வளர்ச்சியில்
சுயநலமின்றி பணியாற்றியவர்களை நினைவுப்படுத்தும் வகையில், அவர்களின் பெயர்களை தாங்கி
இருக்கும் அரங்குகள், கட்டடங்கள் அதற்கு சாட்சியாக உள்ளன.
கல்யாணியின் தந்தை குத்தாலிங்கம், துணைவேந்தராக பணியாற்றிய காலத்தில்தான்
மதுரையில் காமராஜ் பல்கலை கல்லூரி துவங்கப்பட்டது. "துதி பாடிகளின்' போற்றுதலுக்கு
மயங்கிய ஒரு சில துணைவேந்தர்களால் இப்பல்கலை வளர்ச்சி தடைபட்டு, பல சிக்கல்களை சந்திக்க
நேர்ந்தது.
அதிருப்தியை ஏற்படுத்தும் பணி நியமனங்கள், முறைகேடுகள் என அடுத்தடுத்து
நடந்தன. இதனால், "ஆற்றல்சால் பல்கலை' அந்தஸ்தை இழக்கும் சூழ்நிலை கூட ஏற்பட்டு,
தவிர்க்கப்பட்டது. துணைவேந்தர்கள் காலை "வாங்கிங்' போனால் கூட, அவருடன் செல்ல
கூட்டம் தயாராக இருந்தது.
அப்போது, பல்கலைக்கு உண்மையில் உழைக்கும் பேராசிரியர்களை "போட்டுக்
கொடுக்கும்' பணியை அந்த கும்பல் செய்து அவர்களை "கட்டம் கட்டினர்'. துணைவேந்தர்
கல்யாணி, இதுபோன்ற துதிபாடிகளை சற்று தூரத்தில் வைத்தாலே தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்கலாம்.
அடுத்து, அரசு சார்பில் நியமிக்கப்படும் சிண்டிகேட் பிரதிநிதிகள் தலையீடும்
சர்ச்சையை கிளப்பின. சிண்டிகேட் உறுப்பினராக முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜன் போன்றோர்
இருந்த போது துணைவேந்தர்கள் அடக்கியே வாசித்தனர். கல்யாணிக்கு தமிழக முதல்வர்
"ஆசி' உள்ளதால் அது போன்ற ஆதிக்கத்தை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும்.
இப்பல்கலையில் "மொட்டை பெட்டிஷன்' கலாச்சாரம் கொடிகட்டி பறக்கிறது.
இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை வீணாக்குவதை தவிர்க்கலாம். புதிய பாடங்கள்,
புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளுக்களை ஊக்கப்படுத்துதல், தொலைநிலை கல்வியை மேம்படுத்துதல்,
தேர்வுத் துறையில் நிகழும் தாமதங்கள் போன்றவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும். தொலைநிலை
கல்வி சேர்க்கை, கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவதற்கு காரணங்களை ஆராய வேண்டும். அதேபோல்
பல்கலை பதிவாளர், டீன், தனி அலுவலர் போன்ற முக்கிய பதவிகள் காலியாக உள்ளன.
புதிய நியமனங்களை உடன் நடத்த வேண்டும். பல்கலை "டிஸ்கஷன்' என்ற
பெயரில் ஸ்டார் ஓட்டல்களில் கூட்டம் போட்டு துணைவேந்தரை "தாஜா' செய்யும் கலாசாரத்துக்கும்
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே,
"முன்பிருந்த துணைவேந்தரை விட ஒருபடி என்ன, பலபடிகள் மேலாக சாதித்து' சவாலை நிறைவேற்றலாம்.
ஆரம்பிச்சுட்டாங்கய்யா...: துணைவேந்தர் கல்யாணி பொறுப்பேற்க வந்தபோது,
பல்கலை வளாகம் முன் 10 நிமிடங்களுக்கும் மேலாக சரவெடிகள் வெடித்து "உற்சாக வரவேற்பு'
அளிக்கப்பட்டது. இதற்கு ஏற்பாடு செய்தவர் பல்கலையில் ஓய்வு பெற்ற ஒருவர். நேற்று முதல்
துணைவேந்தர் அறையை சுத்தப்படுத்துவது, சேம்பரில் இருக்கை அமைப்பு எப்படி இருக்க வேண்டும்,
யாரை உதவியாளராக நியமிப்பது போன்ற பணிகளை முன்நின்று நடத்தி வருகிறார்.
ஒரு பல்கலை பி.ஆர்.ஓ., செய்யும் வேலைகளையும் அவர் செய்து வருகிறார்.
"அந்த நபர் ஒரு தி.மு.க.,காரர். ஓய்வு பெற்ற பின்னர் பல்கலைக்குள் எப்படி அவர்
வரலாம்&' என முதல்நாளே தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் மனுக்கள் பறந்துள்ளது
பற்றிதான் இப்போது பல்கலையில் "ஹாட் டாப்பிக்'. மரபுப்படி துணைவேந்தர் காருக்கு
"சிவப்பு சுழல் விளக்கு&' பொருத்த அனுமதி இல்லை. ஆனால் துணைவேந்தர் கல்யாணி
வந்த காரில், நேற்று சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment