நெஞ்சு பொறுக்குதில்லையே...
தா.சாமுவேல்
லாரன்ஸ்
முன்னாள்
துணை முதல்வர்
அமெரிக்கன்
கல்லூரி
நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பாடிய பாடல் ஒன்றில், ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது’ என்று ஒரு வரி வரும். சுற்றிலும் நடக்கின்ற பல நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும் பார்க்கின்ற பொழுது, ஏன்? ஏப்படி? இப்படியும் நடக்குமா? இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? என்று பல கேள்விகள் மனதில் தோன்றுகின்றன. இவற்றிற்கு விடை காண முடியவில்லை, என்ன செய்வது? உண்மையிலேயே ஒண்ணும் புரியவில்லை தான்!
குறிப்பாக, நான் பணி புரிந்த, என்னைப்
பண்படுத்தி உருவாக்கிய, நான் என்றும் நேசிக்கும் அமெரிக்கன் கல்லூரியின் அன்றைய உன்னத
நிலைமையும், இன்றைய இழி நிலையையும் பார்க்கின்ற பொழுது, இனம் புரியா வேதனை மனதைக் கவ்வுகிறது
. உயர் கல்வித்துறையில் முன்னோடியாகத் திகழ்ந்த, பாரம்பரிய மிக்க இக்கல்லூரியில் இன்று
நடக்கும் அக்கிரமங்கள், அநியாயங்கள் மனதை வாட்டுகின்றன. தியாக உணர்வுடன் சமுதாய அக்கறையுடன்
அமெரிக்க கிறிஸ்தவ இறைத் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கல்லூரிக்கு இப்படி ஒரு நிலையா?
அன்பு, உண்மை, நீதி ஆகியவற்றை பரப்பிய இறை மைந்தன் இயேசுவின் திருப்பணியில் ஈடுபட்டிருப்பதாகக்
கூறிக்கொள்ளும் திருச்சபைத் தலைவர்களாலேயே இத்தகைய வீழ்ச்சி வரவேண்டுமா? என்று பல கேள்விகள்
மனதில் எழுகின்றன.
2008 ஆம் ஆண்டு, பேராசை கொண்ட அன்றைய பேராயர்
ஆசிர் அவர்களால் துவக்கப்பட்ட இந்த வேதனைப்படலம் இன்றும் தொடர்கிறது. அவர் “நானே எல்லா
அதிகாரமும் கொண்ட நிர்வாகத் தலைவன்” என்று தன்னிச்சையாகப் பிரகடனம் செய்து கொண்டு,
ஒரு ‘தலையாட்டி பொம்மை’யை முதல்வர் ஆக்கியது; காவல் துறையினர், அடியாட்கள் உதவியுடன்
கல்லூரி வளாகத்துக்குள் புகுந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது; போலியாக ஒரு ஆட்சி
மன்றக் குழுவை ஏற்படுத்தி அதைத் தனக்கு வேண்டியவர்களால்
நிரப்பி, தான் விரும்பிய தீர்மானங்களை நிறைவேற்றியது, சிறிதும் தகுதி இல்லாத தனது மருமகனை
முதல்வராக நியமித்தது …. என என்னென்ன அநியாயங்கள் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம்
செய்தார்.
கல்லூரி ‘குரங்கின் கை பூமாலை’யாக சிதைக்கப்பட்டுக்
கொண்டிருந்த வேளையில்
அதற்கு எதிராகக் கல்லூரி கல்வி சமூகத்தினர் (Academic Community ) ஒன்றுபட்டு குரல் எழுப்பியிருந்தால் பேராயரால் அன்று ஒன்றும் செய்திருக்கவே முடியாது. கல்லூரி அப்போதே காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால், நம்மில் அநியாயத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போனவர்கள், நடுநிலை கடைப்பிடிக்கிறேன் என்று கண்ணை மூடிக் கொண்டவர்கள், “ ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன “ என்ற உயர்ந்த கொள்கையுடையோர், அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துணிவற்ற முதுகெலும்பில்லாதவர்கள் என்று பல வகைப் பேராசிரியப் பெருமக்கள் இப்பாதகச் செயல்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்தனர். அநியாயம் தலைவிரித்தாடத் தொடங்கியது.
அதற்கு எதிராகக் கல்லூரி கல்வி சமூகத்தினர் (Academic Community ) ஒன்றுபட்டு குரல் எழுப்பியிருந்தால் பேராயரால் அன்று ஒன்றும் செய்திருக்கவே முடியாது. கல்லூரி அப்போதே காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால், நம்மில் அநியாயத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போனவர்கள், நடுநிலை கடைப்பிடிக்கிறேன் என்று கண்ணை மூடிக் கொண்டவர்கள், “ ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன “ என்ற உயர்ந்த கொள்கையுடையோர், அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துணிவற்ற முதுகெலும்பில்லாதவர்கள் என்று பல வகைப் பேராசிரியப் பெருமக்கள் இப்பாதகச் செயல்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்தனர். அநியாயம் தலைவிரித்தாடத் தொடங்கியது.
அதே நேரத்தில், கல்லூரியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று
கல்லூரியின்
மீது பாசமும்,
பற்றும்
கொண்ட முன்னாள்-இன்னாள் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத
பணியாளர்கள்,
மாணவர்கள்,
நண்பர்கள்
ஒருங்கிணைந்து உறுதியுடன் போராட்டத்தை துவக்கினர். அப்போராட்டம் பலவித தடைகள், இடையூறுகள், குழப்பங்கள் ஆகியவற்றைக் கடந்து
வெற்றியை நோக்கிச் சென்றது. ஆனால் ‘ நான் கடைசி வரை தலைவனாக இருந்தால் மட்டுமே இப்போராட்டம்
வெற்றியடையும் / வெற்றியடைய வேண்டும் ’ என்று ஒரு ஆளுமையும்; தனக்கே உரிய தகுதி, திறமைகளோடு, தலைமை
பொறுப்பும் தன்னிடம் வந்த பின்பும் போதிய துணிச்சலுடன் போராட்டத்தை தொடர்ந்து நடத்த இயலாத பிறிதொரு ஆளுமையும், ஆசிரியர்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையின்மையும், மனச்சோர்வும், போராட்டம்
சிறுது சிறிதாக வலுவிழந்து தேய்ந்து ஒரு பரிதாப
நிலையை அடையக் காரணமாக இருந்தது.
எப்படியோ, பலவித ஏற்ற இறக்கங்களை கண்டு,
வேதனைகள், சோதனைகள், துரோகங்கள் ஆகியவற்றைக் கடந்து இப்போராட்டம் இன்றும் தொடர்கிறது. அப்போராளிகளின் துணிவும், உறுதியும்
நமக்கு மகிழ்ச்சியையும்
நம்பிக்கையையும்
அளிக்கிறது.
ஆனால் அநியாயமும், அநீதியும் அரியணையில் அமர்ந்து கோலோச்சுவது தான் இன்றைய அமெரிக்கன் கல்லூரியின் அவல நிலை.
முறையற்ற ஆட்சிக்
குழுவால், முறையற்ற
முறையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட, முறையற்ற இன்றைய
முதல்வர்
(இது குறித்து வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன) ஆட்சிபீடத்தில் அமர்ந்து கொண்டு, அதிகாரத்தைத் தவறாகப்
பயன்படுத்தி இக் கல்லூரி
‘திருச்சபை
நிறுவனம்’
என்று
பொய்ப்
பிரச்சாரம்
செய்து வருகிறார்.
இது சட்ட விரோதம்.
ஜாதி, மத பேதமின்றி,
எல்லோருக்கும் கல்விப் பணி செய்யப்பட வேண்டும் என்பது தான் இதை நிறுவிய இறையடியார்களின் நோக்கம். அமெரிக்கன் கல்லூரியின் சிறப்பு அடையாளமும், அடித்தளமும்
இதுதான். இது திருச்சபையுடன் தொடர்புடையதாக
இருந்தாலும், திருச்சபையின் கட்டுப்பாட்டிற்குள் உட்பட்டது அல்ல என்பதே உண்மை. அக்கருத்தையே
இன்றைய அமெரிக்க
அறங்காவலர்களும்
(Trustees) இங்குள்ள திருச்சபைத்
தலைவர்களுக்கு
மீண்டும் மீண்டும் விளக்கியிருக்கிறார்கள். ஆனாலும்
இது திருச்சபை நிறுவனம் என்று திரும்ப திரும்பக் கூறி எல்லோரையும் ஏமாற்றுவது அநியாயம். இதற்குப் படித்தவர்களும், அன்று கல்லூரிக்காக
‘மைக்’ பிடித்துவிட்டு இன்று பதவிக்காக கால் பிடிக்கும் பலரும்
உடன் போவது அநியாயத்திலும் அநியாயம்.
முன்போ மாணவர் சேர்க்கையிலும் சரி, ஆசிரியர், பணியாளர்
நியமனத்திலும்
சரி திறமை,
ஆற்றல், அனுபவம் ஆகியவற்றிக்குத் தான் முதலிடம் கொடுக்கப்படும். ஆனால் இப்பொழுது விதிமுறைகள்
மீறப்படுகின்றன;
பாரம்பரியங்கள் தூக்கி எறியப்படுகின்றன. மதம்,
ஜாதி, வேண்டியவன், வேண்டாதவன், ஆதரவாளன், எதிர்ப்பாளன் என்ற அடிப்படையில் நியமனங்கள்
செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்ல முன்பே ‘நெற்றிக்கண்’ இதழில் கூறியபடி
இலட்சக்கணக்கில் பணமும் கொடுக்க வேண்டும்.
அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி கை நிறைய வாங்கப்படுவதாகக் கேள்வி.
நியாயம், நீதி, உண்மை, நேர்மை போன்ற கிறிஸ்தவ நெறி முறைகளுக்கு
எதிராக, திருச்சபையின் பெயரால் இத்தகைய அவலங்களை வைத்துக்கொண்டு கல்லூரி வளாகம் முழுவதும் திருமறை
வாசகங்களை ஒட்டி வைத்திருப்பது இன்னும் ஒரு வெட்கக் கேடு!
கல்லூரிக்காக உண்ணாவிரதமிருந்த
ஆசிரியர், அலுவலர், மாணவர்களைத் தாக்குவதற்காக கல்லூரி சிற்றாலயத்திலேயே
கற்குவியல்களை பதுக்கி வைத்திருந்தவர்களிடம்
வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
130 ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரி, மதுரைக்கு பெருமை சேர்த்த கல்லூரி, பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு அறிவு புகட்டி அறவழி நடத்தி, பல துறைகளில் உயர்நிலையை அடையச் செய்த இக் கல்விக் கோவிலின் புனித வளாகத்தில் இன்று சமுதாய உணர்வோ, நியாய உணர்வோ சிறிதும் இல்லாமல் எதைப் பற்றியும் கவலைப்படாத பெரும்பாலான ஆசிரியப் பெருமக்கள் ஒருபுறம்; சந்தைக் கல்வியைக் கற்று, சமுதாய அக்கறை சிறிதும் இல்லாமல், எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் அதைப்பற்றிய உணர்வும் இல்லாமல் செல்லும் மாணவர்கள் மறுபுறம்.
இப்படி கண்முன்னால்
அமெரிக்கன்
கல்லூரி
சிதைந்து,
அழிந்து போவதைக் காணும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே!
Dear Viewers,
ReplyDeleteI heard a story about the "Madura - American Missionary Board" . The missionaries in those days, found difficulties in settling in the Southern part of Tamilnadu. They wanted to have Madurai as their town of operation. But they needed a place where they could get a similar climate, like America for their survival. In those days they did not have any air conditions. The missionries came to the Southern part of Tamilnadu died due to mosquito/ insect bites and climate conditions. One of the missionaries( I do not know the name) rode a horse to find out a suitable place, ended up at the small mountain( sirumalai) at Dindugal. He established a bunglow there. But due to mosquito bites, that bunglow became unusable.( Even now we can see the bunglow). The same missionary went to Vathalagundu from Dindugal, and found Kodaikanal at the hill top. He passed on the happy news to the other missionaries and they all came to Madurai to do their missionary works. As a result of their selfless and sacrificial service, the great Christian institution " The American college" was born. Nothing could the service of the Christian missionaries.
The Roman soldiers, who guarded the tomb of our Lord and Saviour Jesus Christ and the Roman Government seal, were bribed by the Church leaders, not to tell about the resurrection of Jesus Christ. The disciples were scattered around Rome, after the resurrection of Jesus. Did those things stop the spread of the Gospel ?
These things are not philosophies, but history.
Based on these historical facts, I would say, people have money power can come and go.
People involve in power mongering activities will vanish, once their goal is achieved.
But the Mission will never die.
So, please do not be disheartened.
They think that they are encouraging rowdyism and other forms of degradations/damages only in the American college, with out realizing their own families/generations will follow their foot steps. I am writing this with great agony. I am not trying to curse any one.
Therefore, my dear friends, stop ! please stop ! all your atrocities. Let us find an amicable solution.
Yours,
kingson selvaraj Jesudasan
Australia
What to do?Who can do it? Whose property is The American College? Many people attending the churches in Boston area of USA that that founded the parent mission that founded the college are the real owners. All the pictures of beautiful buildings in Lawrence's write up and a few other buildings would not have come up without the contributions made by such pious people. The contribution from local churches, if any, could be a very small fraction. They, any family that had contributed a good amount or the Church that had raised a large amount should make a claim that The American College belongs to them and move the international court of justice to over throw the present administration. Will it work? Yes it will if there is a WILL.
ReplyDeleteAt the most we may need to move the Supreme Court of India. It is for every one of us, at this “worst of times”, to do all that is possible [and avoid anything that is unhelpful] for taking the struggle to its very end: the inexorable victory of the American College and the beginning of reconstruction by the sixteenth chief executive—before long.
ReplyDelete//... the beginning of reconstruction by the sixteenth chief executive//
Delete!!??
but the person occupying the Principal's chair now "claims" he is the seventeenth principal of the college. ??? !!!
a twist in history???
//a twist in history???//
Deleteno ... a twisted history!!! :(
17, 1+7=8 and 8 is not a good number for many as per numerology. Is he not aware of that?
ReplyDelete1+7 = 8, a number considered bad by some. 17th Principal could be unlucky. Has he thought about it?
ReplyDeleteVS,
Deletetoday's the hindu says that Vajpayee got his home number changed from 8 to 6A !!!!
who knows 17 may be changed to 16A !!!
Dear Viewers,
ReplyDeleteThe constitution of the American college is supreme. Because, the constitution of the college is the constitution of the college. The constitution provides the executive power to the Principal of the college and a discretionary power to the Bishop of Madurai and Ramnad, ONLY during the selection process of the Principal, within certain procedures(Government norms, UGC norms, procedures of the Governing council and so on). If these powers are misused, any individual affected by such an act(violation of any legal and traditional procedures), could approach the court of law. Because the Indian constitution has provided the right to do so. Please remember the verdict of the High Court of Madras-Madurai branch in 2009.
The selection process of 16th or 17th or 18th Principal of the American college is now being challenged in the court of law. I would say, if there is no constitution there is no executive power. If there is no constitution there is no discretionary power. According to me, it is common sense too. Again I say, the constitution is supreme.
We need to demystify the dramas ( which is quite normal to the diocese) of the diocese. So please, let us not be confused by the myths of the diocese.
Yours,
kingson selvaraj Jesudasan
Australia
Prof. V.Srinivasan writes ....
ReplyDeleteWhen CSI was formed, the properties of different churches like their church buildings their schools etc were legally transferred to CSI. This is true of The American College Higher Secondary School, Pasumalai institutions etc. However The American College campus and the properties remained under the control of the College Governing Council. The CSI nor the Bishop can claim ownership of the same.
It is true that the Constitution of our college makes no secret about the powers of the Principal as it proclaims him to be the “executive head”, “official correspondent”, “Secretary”, and “official representative” at once. But, the same constitution mentions the Bishop / President / Chairman only in four places as follows:
ReplyDelete1) In page 4, the Bishop is introduced as the 5th member (after the 3 officers of the college and the two faculty representatives) of the Governing Council in an ‘ex-officio’ capacity;
2) In page 5, it is stated that “all meetings [of the council] shall be called by the secretary in consultation with the president”;
3) In page 7, we find that the President “shall preside at all meetings of the Council”. It also adds in the same breath that some other member can do that in case the president is absent, and
4) In page 20, it says: “The Chairman of the Council and subsidiary bodies shall have a vote as a member of that body but shall not have a casting vote.”
To my humble knowledge, this is all the Constitution of our college says about the Bishop or his ‘powers’.
Yes, the constitution is supreme.
Some history: As per the constitution of the College that existed prior to the current constitution, the bishop is just an ex-officio member and not the chairman. The chairman is elected for each meeting as the first item of business when the council met and out of courtesy and respect to his office the bishop was proposed to be the chairman in the floor and was elected un opposed. This is repeated at every meeting. There was no permanent chairman of the Governing Council of the college in the good old days.
ReplyDelete// However, The American College campus and the properties remained under the control of the College Governing Council. The CSI nor the Bishop can claim ownership of the same.//
ReplyDeleteWhat Prof. VS has said is very true. It is everybody’s knowledge that the relationship between the American College and the Church of South India is one of Christian fellowship and nothing to do with the ownership of the college.
The constitution of the American college nowhere says this is a CSI institution.Likewise, the CSI constitution never mentions the American College in the list of their educational institutions.
Why this? Or, how come?
May be, some believe they can grab this huge property through: continuous false propaganda; concoction and circulation of ridiculously fake evidences; deployment of corrupt officials and downright hooligans, and any other means they are well accustomed to.
Well, we should stand our ground until those who came out against this great institution one way flee in seven!
WE WILL.
Dear Viewers,
ReplyDeleteThe certificates of the 6,00,000 teachers ( from 65,000 Govt. and Govt. aided schools) are being scrutinized by the government at the moment. Because there is a lot of teachers working in the schools with fake certificates.
They could be charged under the following sections of the criminal act.
1. Forgery
2. Fraud on public.
3. Counterfeiting on Government symbols.
I also heard that some people in the colleges and universities also involve in such activities.
Therefore I hope, a serious enquiry into such matters would purify our higher education.
If anyone has got "selection grade" and has been promoted as the "head" of the institutions (colleges or universities), using fake M.phil degree or Phd need to be immediately arrested and face the criminal proceedings in the court.
There are few steps involve in this process of bringing things into light.
1. A complaint needs to be launched at the local police station.
2. An immediate report has to be sent to the Chief Minister's Cell.
3. The Chancellor of the Universities need to be notified, for further immediate action.
I think, it would be relevant, the universities and the colleges(providing fake degrees), which involve in such activities need to be banned and kept in the black list.
Yours,
kingson selvaraj Jesudasan.
Australia
Dear Viewers,
ReplyDeletePeople using fake degrees for getting positions, promotions and Government salary are the real culprits. People, those who steal government money by producing fake certificates, need to be arrested immediately and kept behind bars. Allowing them to handle government money, could lead to serious offences, in future.
Any decisions made by the chairman of the Governing Council, which is declared as illegal, become illegal too. Any illegal Governing council, becomes unconstitutuional. Any unconstitutional group, which grabbed the office of the Principal need to be driven away by proper police action or judicial directions.
Regards,
kingson selvaraj Jesudasan
Australia
*sam*
ReplyDelete