*
(casabianca கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)
Casabianca கதைல வர்ர பையன் மாதிரி மடையனாக இருக்கக்கூடாது.
(பாவம் உன் மகன்!!)
*************************************
PLAYING GAMES .... SAFELY AND INTELLIGENTLY !!!!
"You are a deadly perfectionist".
"இல்ல'ண்ணே!"
"ஏம்'பா இல்லன்னு சொல்றே?"
"என்னைப் பொருத்தவரை perfectionist அப்டின்னா, அவர் ராத்திரி சரியா 12
மணிக்கு எழுந்திருச்சி.. டெய்லி கேலண்டரிலிருந்து அன்றைய தேதியைக்
கிழிக்கணும்'ணே! நான் அந்த அளவு perfectionist இல்லை".
"அடப் பாவி! அப்படியும் ஒண்ணு இருக்கா?"
********************************
(casabianca கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)
Casabianca கதைல வர்ர பையன் மாதிரி மடையனாக இருக்கக்கூடாது.
என்ன கதைண்ணே அது?
கதை சொன்னேன்.
ஏ'ண்ணே, அந்த பையன் செஞ்சதுதான் சரி'ண்ணே.
இல்லப்பா ... பையனோட அப்பா கூட அந்தக் களேபரத்தில் தப்பியிருக்கலாம். இப்படி நெருப்பு எரியும்போது தப்பிக்க வேண்டாமா?
இல்லண்ணே .. அப்பா சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கிறதுதான் சரி.
இல்லப்பா .. புத்திசாலித்தனம் அப்டின்னு ஒண்ணு இருக்கு. அதையும் நாம
பயன்படுத்தணும். அப்பா சொல்லிட்டார் என்பதற்காக அப்படியே 'ஒழுகக் கூடாது'.
கண்மூடித்தனமா இருக்கக் கூடாதுல்ல ..
இல்லண்ணே ... என் மகன் அந்தப் பையன் மாதிரி தாண்ணே இருக்கணும்.
(பாவம் உன் மகன்!!)
*****************************
இன்னைக்கி காலேஜ் வர்ர வழியில ஒரு சண்டை.
ஏண்ணே?
ரெண்டு பேரு ரோட்டை மறிச்சி நின்னுக்கிட்டு கதையடிச்சிக்கிட்டு இருந்தாங்க.
ஓரமா நிக்கக் கூடாதான்னு கேட்டேன். பேச்சு வளர்ந்திருச்சி.
அதெல்லாம் நமக்கு எதுக்குண்ணே?
ஏம்'பா .. civic sense அப்டின்னு ஒண்ணு இருக்குல்ல?
அதெல்லாம் பார்க்க முடியாதுண்ணே.
அப்போ நீ இந்த மாதிரி விஷயங்களைக் கண்டுக்க மாட்டியா?
இல்லேண்ணே.. பேசாம ஒதுங்கி வந்திருவேன்.
கண்டுக்க மாட்டியா?
எதுக்குண்ணே ..? அவனுக யாரோ என்னவோ ... நம்ம வழியைப் பார்த்து நாம ஒதுங்கி வந்திரணும்ணே ...
இதையெல்லாம் பார்த்தா உனக்குக் கோபம் வராதா?
வந்தா என்ன லாபம்? BP மட்டும்தான் ஏறும்!
செல் போன் பேசிக்கிட்டு வண்டி ஓட்டுறவங்களைக் கண்டாலே எனக்குக் கோபமா வருதே ..
தப்பு'ண்ணே. அவன் போன் .. அவன் பேசிக்கிட்டு போறான். உங்களுக்கு ஏன் கோபம் வருது?
உன்னிட்ட இருந்து நிறைய படிக்கணுமோ!?*************************************
PLAYING GAMES .... SAFELY AND INTELLIGENTLY !!!!
நம்ம காலேஜ்ல இத்தனைப் பிரச்சனை. இதில நியாயத்தின் பக்கம்தானே நாம நிக்கணும்.
நம்ம philosophy வேற'ண்ணே.
என்னப்பா அது?
அண்ணே! ஒண்ணு, எதுலயும் நாம முதல் ஆளா இருக்கணும்; இல்லாட்டி முதல் ஆளோடு நின்னுடணும்.
இது சரியில்லை'ப்பா.
அப்பதான் வாழ்க்கையை நல்லா வாழ முடியும்.
நியாயத்துக்குப் பக்கம் நிக்கிறது ...?
நமக்கு வாழ்க்கை சுகமா நடக்கணும். அதுக்கு இதுதான் வழி'ண்ணே.
இல்லையே ..உன்ன மாதிரி ஆளுகளுக்கு TIME SERVER அப்டின்னு பேரு. யாருக்கும் - தனக்கும் கூட - அவங்களால் உண்மையா இருக்க முடியாது.
ஆனா, இதுலதான் நம்ம பொழைப்பு நல்லா நடக்கும்'ண்ணே ...?
*******************************************