ஊழல்
புகாரிலும் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டிலும்
சிக்கித் தவிக்கும் பிரபல கல்லூரி முதல்வர்.
சி.பி.ஐ.பிடியில்
அமெரிக்கன் கல்லூரி முதல்வர் கிறிஸ்டோபர் தவமணியும்
பொருளாளர் ஷீலாவும்
வேலை
வாய்ப்புகளை உருவாக்கும் விதமான பாடங்களை நடத்த கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி.
சிறப்பு நிதி வழங்கி வருகிறது. கல்லூரிகளில் படிக்க வசதியில்லாத, உடனடியாக வேலைகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு பயனளிக்கவே இந்தப் பாடங்கள். இதற்கு வழங்கப்படும் நிதியை பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கான
ஊதியம்
மற்றும் கருவிகள் வாங்குவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அமெரிக்கன் கல்லூரியில் யூ.ஜி.சி.
விதிமுறைகளின்படி பயிற்சிபெற்ற ஆசிரியர்களை நியமிக்காமல் ஏற்கனவே பணிசெய்யும் ஆசிரியர்களைப் பயன் படுத்தியுள்ளதோடு, அங்கு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களை வற்புறுத்தி மாணவர்களாக இணைத்துள்ளார். இது மிகப்பெரிய விதிமீறலாகும். ஏறத்தாழ 2கோடிக்கும் மேலான யூ.ஜி.சி.
தொகையில் முதல் தவனையாக வந்த 92லட்சத்தில் 73 லட்சத்தை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் இதற்கு பொருளாளர் பேராசிரியர் ஷீலாவும் உடந்தையாக இருந்துள்ளார் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சகட்டமாக முதல்வர் தவமணியும் பொருளாளர் ஷீலாவும் அவர்கள் சொந்த வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றியுள்ளதை அந்தக் கல்லூரி பேராசிரியர் பிரேம்சிங் என்பவர் ஆதாரங்களோடு வழக்குத் தொடுத்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக பல்கலைக் கழகத்திற்கு புகார் மனு கொடுத்ததைத் தொடர்ந்து பேராசிரியர் பிரேம்சிங் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளார். சி.பி.ஐ.
விசாரிக்கத் தொடங்கியுள்ள இந்த விவகாரம் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்களை
வெளிக்கொண்டுவந்துள்ளது.
கடந்த
10 ஆண்டுகளாக அமெரிக்கன் கல்லூரியின் முதல்வராகவும் செயலராகவும் இருந்து வரும் தவமணி கிறிஸ்டோபர், தொடர்ந்து பல்வேறுவிதமான சர்ச்சைகளில் சிக்கி வருபவர். 50க்கும் மேற்பட்ட சீனியர் பேராசிரியர்களை பின்னுக்குத் தள்ளி, பேராயராக இருந்த அவருடைய மாமனாரின் தயவில் முதல்வரானார். கல்லூரிக்குள் பெரும் கலவரத்தையும் வன்முறையையும் நடத்தித்தான் முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர் அழகப்பா பல்கலைக் கழகத்தில் பெற்ற பி.எச்.டி.
பட்டம் முறைகேடாகப் பெற்றது என்ற வழக்கு இன்னும் உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பதவியேற்ற நாள் முதல் இதுவரை 80 பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்திற்கு தலைக்கு 40 லட்சம் வரை மொத்தமாக 20 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளார். மாணவர் அட்மிசனுக்கு 25 ஆயிரங்கள் முதல் 1லட்சம் வரை சிக்கிய வரை லாபம் என்று கல்லா கட்டி வருகிறார். கட்டிடங்கள் கட்டுவதில் 40 சதவீதம் கமிசன், விடுதிக்கட்டணத்தில் கமிசன் என்று பத்தாண்டுகளில் பல நூறு கோடிகளைச் சொத்துக்களாகச்
சேர்த்துள்ளார். ஆசிரியர்களை மிரட்ட அடியாட்களை வேலைக்கு வைப்பது, கேள்வி கேட்கும் ஆசிரியர்களை சஸ்பண்ட் செய்வது, விடுதி கட்டணக் கொள்ளையை எதிர்க்கும் மாணவர்களை மிரட்டுவது என்று ஒரு கிறிஸ்தவ மாஃபியாவாகத் செயல்பட்டு வருகிறார். காவல் துறை, ஜே.டி.சி
அலுவலகம், உயர் கல்வித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என்று எல்லா இடங்களிலும் பினாமி ஜான்சன் தவமணி கிறிஸ்டோபரின் செல்வாக்கு யாரும் கற்பனை செய்ய முடியாதது. அவர் தாராளமாக வாரி வழங்கும் வைட்டமின் 'ப'வின் சக்தி
அப்படி என்று சொல்கிறார்கள். இவருக்கு பினாமியாக செயல்படுபவர் பெயிண்ட் கடை ஜான்சன். முதல்வருக்கு ஏற்படும் பாலியல் ரீதியான சிக்கல்களையும், மற்ற அப்பாயின் மண்ட் மற்றும் அட்மிசன் ரீதியான கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடைத்தரகராய் இருந்து வருபவர். கல்லூரிக்குள் முதல்வர் தவமணி செய்யும் அத்தனை அத்துமீறல்களுக்கும் பக்கபலமாய் இருந்து வருபவர்கள் முதல்வரின் நண்பர்களான உடற்கல்வி ஆசிரியர் ஒருவரும் வணிகவியல் துறைத்தலைவரும். முதல்வரை எதிர்ப்பவர்களுடன் பஞ்சாயத்து செய்வது, மாணவர்களை, ஆசிரியர்களை மிரட்டுவது போன்ற செயல்களைச் செய்து வருபவர்கள். இதற்கு பிரதிபலனாக முதல்வருடன் வெளிநாடுகளுக்கு உல்லாச பயணங்கள் சென்று வருபவர்கள். முதல்வரின் இந்த இரண்டு நண்பர்களைப் பற்றி பேராசிரியைகளிடம் விசாரித்தால் பல விசயங்கள் வெளிவரும்.
மதுரையைச்
சுற்றி பலநூறு ஏக்கர் நிலங்களை வளைத்துப்போட்டுள்ள தவமணி கிறிஸ்டோபர் கொடைக்கானலில் மட்டும் 4 பங்களாக்களை வாங்கிப் பராமரித்து வருகிறார். ஒரு சொகுசு பங்களாவில் ஹோம் தியேட்டர் மட்டும் 50 லட்சங்களாம். இந்த பங்களாக்களில் அரசு அதிகாரிகள் மற்றும் வேண்டப்பட்டவர்களுக்கு சகல வசதிகளும் செய்து தரப்படுமாம். ஆகவே எந்த அரசுத்துறையும் அவர்மேல் கைவைக்க முடியாதாம். முதல்வரின் சொத்து மதிப்பு 200 கோடிகள் என்று கணக்கெடுத்தபின்னும் வருமான வரித்துறையோ , லஞ்ச ஒழிப்பு துறையோ வேடிக்கை பார்ப்பதன் காரணம் ஊகிக்க முடியாததல்ல. முதல்வர் தவமணிக்கு ஜெர்மன் கார்கள் என்றால் அலாதி பிரியம். அவர் வைத்திருக்கும் கார்களின் பட்டியல் தமிழக முதல்வர் வைத்திருக்கும் கார்களின் பட்டியலைவிட நீளமானது. பென்ஸ், பி.எம்.டபிள்யூ,
ஆடி, ஸ்கோடா. இவ்வளவு புகார்களுக்குப் பின்னும் முதல்வர் தவமணி சென்ற மாதம் வாங்கியிருக்கும் ஆடி காரின்'விலையே
70 லட்சம் மட்டுமே. கொடுக்கல் வாங்கலில் கல்லூரி முதல்வர் பிஸியாக இருப்பதால் மாணவர்கள்மேல் கவனம் செலுத்துவதில்லையாம். அமெரிக்கன் கல்லூரி விடுதியில் மாணவர்கள் சிலர் கஞ்சா வியாபாரம் செய்துவந்த விசயம், அப்போதைய கமிஷனர் வரை போய் தவமணியை கடுமையாக எச்சரித்து அனுப்பினாராம் அப்போதைய கமிஷனர். பாரம்பரியமிக்க கல்லூரியின் பெயர் கெடக்கூ டா தென்று அந்த
விசயம் காவல்துறையின் நடவடிக்கைக்குள்ளாகாமல் மூடப்பட்டது.
இவை
ஒரு புறமிருக்க, இளம் பெண் பேராசிரியர்களை ஒருமையில் அழைப்பது, வா புள்ள, போ
புள்ள என்று செல்லமாக பேசுவது, இந்த சேலை உனக்கு நல்லா இல்ல என்று விளையாடுவது கண்டு பெண் பேராசிரியர்கள் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இது குறித்து விசாரித்தால் அதிர்ச்சியூட்டும்
உண்மைகள்
வெளிவரும். அவருக்கு எதிராக மூச்சு விட்டாலே அவருக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்கிறார் ஒரு இளம் பேராசிரியை. முதல்வருடைய பிறந்த நாள் ஒன்றில் மாணவிகளும் இளம் பேராசிரியர் ஒருவரும் அவருக்கு கேக் ஊட்டி, அவர் முகத்தில் கேக்கைத் தடவி விளையாடிய வீடியோ கல்லூரி வட்டாரத்தில் பிரபலம். இந்த முறைகேடுகள் குறித்து மூத்த பேராசிரியர்கள் பலமுறை கல்லூரி கவுன்சிலுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையே அரசு விதியின் படி தவமணி கிறிஸ்டோபரின் முதல்வர் பதவிக்காலம் முடிவுக்கு
டது.
கடந்த அக்டோபர் மாதத்தோடு முதல்வருக்கான 10 ஆண்டு காலம் நிறைவடைவதால் அவர்முதல்வராக நீடிக்க முடியாது. தவமணி ஓய்வு பெற இன்னும் 3ஆண்டுகாலம் உள்ளதால் அது வரை முதல்வராகத் தொடர்வேன் என்று வழக்கு மன்றத்தை நாடியுள்ளார். பணி நீடிப்பு விசயத்தில் தமிழக உயர்கல்வித்துறையின் தயவும் தமிழக அரசின் தயவும் தேவை என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு கொரானா நிதியாக 25லட்சத்தை தமிழக முதல்வரிடம் அளித்துள்ளார். தமிழகத்தில் எந்தக் கல்லூரியும் இத்தகைய நிதி வழங்கியதாகத் தெரியவில்லை என்பதோடு, ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை இப்படித் தன் சுயநலத்துக்காக நன்கொடையாக வழங்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று மூத்த ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
ஏற்கனவே
அதிமுக அரசை சமாளித்ததுபோல் ஊழலற்ற ஆட்சி வழங்குவதில் முனைப்பாக இருக்கும் திமுக அரசையும் சமாளித்து பதிவியில் தொடர்ந்தே தீருவேன் என்று சவால் விட்டுள்ளாராம் தவமணி கிறிஸ்டோபர். தவமணி கிறிஸ்டோபர் பதவி ஏற்ற நாள் முதல் கல்லூரியின் தரம் தாறுமாறாக ஆகிவிட்டது. ஆண்டுதோறும் இந்தியாவின் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. நூறு சிறந்த கல்லூரிகளில் மதுரையின் தியாகராஜா கல்லூரியும் லேடிடோக் கல்லூரியும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கன் கல்லூரி 200க்கு அருகாமையில் உள்ளது. இதுதான் முதல்வரின் சாதனை.
சமீபத்தில்
தீடீரென மதுரை மாணவர்கள் ஆன் லைன் தேர்வுதான் எழுதுவோம் என போராட்டத்தில் குதித்தனர்.
இந்தப் போராட்டம் எங்கிருந்து தொடங்கியது என காவல்துறை புலன்விசாரணை
செய்யத்தொடங்கியது. விசாரணையில் இந்தப் போராட்டம் மதுரையிலிருந்து அதிலும் அமெரிக்கன் கல்லூரியில் அதன் முதல்வரான தவமணியால் திட்ட மிட்டு உருவாக்கப்பட்டது என்று கண்டுபிடித்தனர். கட்டண வசூலுக்காக கணக்கில்லாமல் மாணவர்களைச் சேர்த்ததன் விளைவாக, கொரானா கால கட்டுப்பாடுகள் எதையும் பின்பற்றமுடியாது என்பதாலும், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த ஆன் லைன் தேர்வுதான் வசதி என்பதாலும் முதல்வர் தவமணியே இந்தப் போராட்டத்தை தூண்டிவிட்டார் என்பதை வாட்ஸ் அப் செய்திகள், முதல்வர் மாணவர்களுடன் பேசிய வீடியோ போன்ற ஆதாரங்களைக் கண்டு அனைத்து கல்லூரி முதல்வர்கள் முன்னிலையில் தவமணியை எச்சரித்து அனுப்பியுள்ளார் மதுரை ஆட்சியர் முதல்வர் பதவிக்கு வருவதற்காக 10 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களை வைத்தே பெரும் கலவரத்தை வெற்றிகரமாக
நடத்தியவர் என்பதையும் சக ஆசிரியர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.
மைனாரட்டி என்ற
போர்வையில் ஒரு பாரம்பரியமான கல்வி நிறுவனத்தை நாசமாக்கி வருவதை
ர் கல்வித்துறை கண்டு
கொள்வதில்லையாம். ஏனெனில் உயர்கல்வித்துறையே தவமணி கிறிஸ்டோபரின் கவனிப்பில்
இருக்கிறதாம். 10 ஆண்டுகள்தான்
முதல்வர் பணிக்காலம் என்ற அரசு ஆணையையை எனக்காக தமிழக அரசு மாற்றும்.
அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். 2025 வரை
என்னை யாரும் அசைக்கமுடியாது என்று சவால் விட்டுள்ளாராம் தவமணி கிறிஸ்டோபர். தவணியின் சவாலுக்கு தமிழக அரசின் எதிர்வினை
என்னவாக இருக்கப்போகிறது? உயர்
கல்வித்துறை அமைச்சரும் தமிழக முதல்வரும் நல்ல முடிவை எடுத்து கல்லூரியைக்
காப்பாற்றினால்தான் உண்டு என்கிறார்கள் மூத்த பேராசிரியர்களும் கல்லூரியின் நலன்
விரும்பிகளும்.
*****
Prof.Dr. PREM SINGH filed a case against his suspension and won the case. he is now back in the college. CBI has filed a case against Christoper for the alleged fraud on UGC grant.